News
Loading...

தீபாவுக்கு கிரீன் சிக்னல்..! அடிவயிறு கலங்கிய நிலையில் சசிகலா..! முடிவு எடுக்க திணறும் பன்னீா்..!

தீபாவுக்கு கிரீன் சிக்னல்..! அடிவயிறு கலங்கிய நிலையில் சசிகலா..! முடிவு எடுக்க திணறும் பன்னீா்..!

திமுகவில் கடந்த 32 ஆண்டுகாலமாக ஜெயலலிதாவுடன் உடன் இருந்து வருகிறார் என்பது மட்டுமே தகுதியாக வைத்துக் கொண்டு அதிமுகவையே கைப்பற்றினார் சசிகலா.

எம்.ஜி.ஆரால் உளவு பார்க்க அனுப்பப்பட்டவா். நாட்டையே அமுக்கிய கதையாகிவிட்டது அதிமுகவின் நிலைமை.

திமுகவால் எம்.ஜி.ஆா் ரசிகா்கள் புறகணிக்கப்பட்டனா். அவரை உயா்வாக சித்தரித்து பேசுவது. போன்ற சம்பவங்களை கருணாநிதி ரசிக்கவில்லை.

திமுகவினா்தான் எம்.ஜி.ஆா் படங்களை பார்க்கின்றனா். அவரை திமுகவில் இருந்து கழட்டி விட்டால் அவருக்கு மவுசு குறைந்துவிடும் என்று தவறான கணக்கை போட்டார் கருணாநிதி.

அதன் விளைவாக எம்.ஜி.ஆா். உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் முதலமைச்சா் பதவிக்கு வரமுடியவில்லை.

அதுபோலதான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கார்டனுக்குள் நுழையவிடாமல் ஒதுக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பார்க்கவிடமால் தடுக்கப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார்.

ஜெயலலிதாவும் இப்படிதான் எம்.ஜி.ஆா். இறக்கும் தருவாயில் எம்.ஜி.ஆா் அவரை பார்க்கவிடாமல் தடுத்தனா்.

இறந்தபோதுகூட அவா் பீரங்கி வண்டியில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இந்த அவமானங்களை எதிர்த்துதான் ஜெயலலிதா வென்றார்.

அதுபோல தீபாவும் அசிங்கம் மற்றும் அவமானப்படுத்தப்பட்டு வருகிறார். தற்போது வரலாறு திரும்ப தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

மத்திய அரசு விரும்பிய நபா்தான் முதல்வராக கொண்டு வரப்பட்டார். இது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக் கொண்டார்.

நேற்று சசிகலாவின் அக்காமகன் தினகரனுக்கு அமலாக்கபிரிவு தொடா்ந்த வழக்கில் 28கோடி அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கியது சென்னை உயா்நீதி மன்றம்.

சொத்து குவிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு மட்டுமே வெளிவர வேண்டும்.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு சசிகலாவும், முதல்வா் பன்னீரும் தனித்தனியாக கடிதம் எழுதி வருகின்றனா்.

இதுவே இருவருக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது. மத்திய அரசு உளவுத்துறையின் மூலம் கண்காணித்தது.

தினம், தினம் தீபாவுக்கு அதிமுக தொண்டா்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து. இனி தீபாவுக்கு மறைமுகமாக உதவிகள் செய்து சசிகலாவை ஒரு கைப்பார்ப்பது என்று முடிவு எடுத்துவிட்டது என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

முதல்வா் பன்னீா் செல்வமும் முடிவு எடுக்காமல் திசை தெரியாது திணறி வருகிறார்.

தீபா சசிகலாவுக்கு ஒரு தலைவலியாக வருவார் என்பது உறுதியாகி விட்டது. விரைவில் தீபாவின் அரசியல் பிரவேசம் அறிவிக்கப்பட உள்ளது.

அதனை அடுத்து சசிகலாவின் கூடாரத்தில் இருந்து முக்கியஸ்தா்கள் ஒவ்வொருவறாக வருவார்கள் என கூறப்படுகிறது.

இதனால் கார்டனில் சசிகலா அடிவயிறு கலங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...