News
Loading...

தமிழகத்தில் இன்று மட்டும் 6 விவசாயிகள் மாரடைப்பால் இறந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று மட்டும் 6 விவசாயிகள் மாரடைப்பால் இறந்துள்ளனர்

நீரின்றி பயிர்கள் கருகிய கவலையில் விவசாயிகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது, தமிழகத்தில் இன்று மட்டும் 6 விவசாயிகள் மாரடைப்பால் இறந்துள்ளனர்.

நீரின்றி பயிர்கள் பாழானதை கண்ட வேதனையில் தஞ்சாவூர் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமியும், சின்னகுமிலி கிராமத்தை சேர்ந்த ராமசாமியும் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கனகன்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பரமணி வயல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னலூரை சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன் ஆகியோரும் பயிர்கள் பாழானது கண்டு வேதனையில் உயிரிழந்தனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டியைச் சேர்ந்த குப்பமுத்து என்ற விவசாயியும் மா‌ரடைப்பால் உயிரிழந்தார்.

நீரின்றி பயிர்கள் வாடிய வேதனையில் விவசாயிகளின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரின்றி விவசாயத்தில் பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு, தற்போது கால்நடைகளை வளர்ப்பதும் பெரும் சுமையாகிவிட்டது. வறட்சியால் தீவனமின்றி வாடி வரும் கால்நடைகளை, வேறு வழியின்றி சந்தையில் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...