News
Loading...

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.92 கோடி


வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்படுவதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டு, அந்த மாதம் 30-ந் தேதி வரை திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. 

இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுதவிர இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் உண்மை தன்மை அறிவதற்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்த நிலையில், நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது தயாராகி உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி, பெண் வாக்காளர்கள் 2.99 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 5040 பேர் உள்ளனர். 2016-ல் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகர வாக்காளர்கள் 10.22 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6,22,333 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சம் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் (தனி) 1,66,920 வாக்காளர்கள் உள்ளனர். 

புதிய வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வாக்காளர் அட்டை விநியோகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...