News
Loading...

பண பரிவர்த்தனையை தவிர்க்க 17 ஆயிரம் பஸ்களில் வைபை சேவை

பண பரிவர்த்தனையை தவிர்க்க 17 ஆயிரம் பஸ்களில் வைபை சேவை

ண பரிவர்த்தனை இல்லாமல் செல்போன்களில் இருந்து ஆன்லைன் மூலம் பஸ்டிக்கெட் பெறும் வசதிக்காக 17,000 பஸ்கள் மற்றும் 450 பஸ் நிலையங்களில் வைபை சேவை தொடங்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது என அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார். பெங்களூரில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்: நாடு முழுவதும் பண பரிவர்த்தனை இல்லாமல் ஏ.டி.எம். கார்டுகளைக்கொண்டு பொருட்களை வங்க முன்வரவேண்டும் என மத்திய அரசு நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மாநிலத்தில் ஓரளவுக்கு பொதுமக்கள் ஏடிஎம், ஸ்மார்ட் கார்டுகளைக்கொண்டு, பொருட்கள் வாங்க தொடங்கியுள்ளனர்.இதேபோல பண பரிவர்த்தனை இன்றி ஆன்லைன் மூலம் பஸ்களில் பயணம் செய்வோர் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து கழகம் முன்வந்துள்ளது.

இதற்காக பஸ் நிலையத்திற்கு வருவோர் மற்றும் பஸ்களில் பயணம் செய்வோர் சுலபமாக டிக்கெட்டுகள் வாங்க வசதியாகவும், சில்லறைத்தட்டுப்பாட்டை போக்கவும், பஸ்களில் வைபை சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 17,000 பஸ்கள் மற்றும் 450 பஸ் நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட உள்ளன. அதன்படி  கே.எஸ்.ஆர்.டி.சியில் 8,317 பஸ்களும், 957 பிரிமியம் பஸ்களும், வடகிழக்கு போக்குவரத்து கழகத்தில் 4,785 பஸ்களும், 157 பிரிமியம் பஸ்களும், கே.எஸ்.ஆர்.டி.சியில் 4,346 பஸ்களும், 142 பிரிமியம் பஸ்களும், வடமேற்கு போக்குவரத்து கழக பஸ்களில் வைபை சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன், 156 கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் நிறுத்தங்கள், 160 வட கிழக்கு மற்றும் 136 வடமேற்கு போக்குவரத்து கழகங்களின் பஸ் நிறுத்தங்களில் வைபை சேவை அளிக்கப்பட உள்ளன. வரும் 23ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

முதல்கட்டமாக பெங்களூரு, மைசூர், ஹாசன், மைசூர், மடிகேரி, தர்மஸ்தலா, குந்தாபுரா, ஷிவமொக்கா, அரிஹர், தாவணெகெரே, துமகூரு, கோலார், சித்ரதர்கா ஆகிய பஸ் நிலையங்களில் வைபை சேவை அளிக்கப்படும். மேற்கண்ட பஸ் நிலையங்களில் வைபை சேவை செய்வது குறித்து முதல் கட்ட ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்