News
Loading...

தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை

தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை

தேர்தலின் போது ஜாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரை உபயோகித்தோ வாக்கு சேகரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் என்பது ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. மதத்தை பின்பற்றிக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இருப்பினும் தேர்தலின் போது மதத்தை இதில் நுழைப்பது மிகவும் தவறு.

இந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில், ஜாதி, மதம் ஆகியவற்றின் பெயரில் தேர்தலின் போது ஓட்டு சேகரிப்பது சட்ட விரோதமானது. அவ்வாறு வாக்கு சேகரிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்