News
Loading...

ஒரு வாரத்தில் 60 விவசாயிகள் பலி : என்னதான் நடக்குது தமிழ்நாட்டுல..?

ஒரு வாரத்தில் 60 விவசாயிகள் பலி : என்னதான் நடக்குது தமிழ்நாட்டுல..?

றட்சி காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த 60 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக சரிவர மழை பொழியாதது, வேண்டிய அளவில் காவிரியில் நீர் திறக்கப்படாதது ஆகிய காரணங்களினால் தஞ்சை டெல்டா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். குறிப்பாக இந்த விவசாயிகள் அனைவரும் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளதால், வறட்சி காரணமாக பயிர்கள் கருகுவதை கண்டு மனம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் நாகை மாவட்ட விவசாயிகள் மட்டும் 32 பேராவர். இன்று காலை கூட பயிர்கள் கருகியதை கண்டு மனம் நொந்து போன நாகை விவசாயி ஒருவர்,மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த உயிரிழப்புகளை உடனே தடுத்து நிறுத்த, மத்தியக் குழு விரைவில் தமிழகத்தை பார்வையிட்டு, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு மற்றும் அரசு வேலை ஆகியவை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...