News
Loading...

ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் முடிவு

ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் முடிவு

ஜெயலலிதாவின் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்கும்படி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சகத்தில் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட உள்துறை அமைச்சகம் ஜெயலலிதாவின் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களுக்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நிலை தேறிவந்த நிலையில், திடீரென உயிரிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சசிகலாபுஷ்பா கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தற்போது உள்துறை அமைச்சகம், சிபிஐ.,க்கு பரிந்துரை செய்துள்ளது. புகார் குறித்துத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியதால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணத்தில் உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்