News
Loading...

போராடிப் பெற்றார் கருணாநிதி… தானாகக் கிடைத்தது ஓ.பி.எஸ் -க்கு!

போராடிப் பெற்றார் கருணாநிதி… தானாகக் கிடைத்தது ஓ.பி.எஸ் -க்கு!

மிழகத்திற்கான கவர்னர் ஒருவரை மத்திய அரசு நியமிக்காததால் தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் குடியரசு தினத்தன்று கொடியேற்றும் வாய்ப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்துள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி குடியசு தினம் அன்றும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் அன்றும் நாடெங்கிலும் தேசியக்கொடி ஏற்றும் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில் குடியரசு தினமாகவும், சுதந்திரம் பெற்றதைப் பறைசாற்றும் வகையில் சுதந்திர தினமும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த நாட்களில் தலைநகர் டெல்லியில் நாட்டின் சார்பில் ஜனாதிபதியும், அந்தந்த மாநிலங்களில் அங்குள்ள கவர்னர்களும் தேசியக்கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதைகளை ஏற்று வந்தனர்.

மக்கள் பிரதிநிதியான, மாநில முதல்வர்களுக்கும் தேசியக் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கருணாநிதி போராடி வந்தார். 1974 ஆம் அண்டுதான் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் கொடியேற்றுவார்கள் என்றும், குடியரசு தின விழாவில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் கவர்னர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் கொடியேற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில், ஆண்டுதோறும் சுதந்திர தினமன்று கோட்டையில் முதல்வர் கொடியேற்றுவார். குடியரசு தினமன்று மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாடப்படும்.

மஹாராஷ்டிரா கவர்னர் தமிழக கவர்னராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பதால் அவர் நியமிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில் இன்று குடியரசு தினவிழாவில் கலந்துகொள்கிறார். காலை 8 மணிக்கு, ஒரே நேரத்தில் நாடுமுழுவதும் மாநிலத் தலைநகரங்களில் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

எனவே, வித்யாசாகர் தமிழகத்திற்க்குக் கொடியேற்ற வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக கவர்னராக இருந்த ரோசைய்யாவின் பதவிகாலம் முடிந்து ஐந்து மாதங்களாகியும் தமிழகத்திற்காகப் புதிய கவர்னர் நியமிக்காததால்தான் தமிழக முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது.

தேசியக்கொடி ஏற்ற நாட்டில் இருந்த நடைமுறையை போராடி உடைத்து, சுதந்திர தினம் அன்று கொடியேற்றும் உரிமையைப் பெற்றவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

ஆனால், இப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குடியரசு தினத்திலும் கொடியேற்றும் வாய்ப்பு இந்த ஆண்டு தானாகவே கிடைத்துள்ளது. மூன்றாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கு முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பும் இப்போதுதான் கிடைத்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...