News
Loading...

தனுஷ் நடிப்பில் திரைப்படமாகிறது மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை

தனுஷ் நடிப்பில் திரைப்படமாகிறது மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ளார். படத்திற்கு மாரியப்பன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டரை இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகனான ஷாருக்கான் ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு பிறந்தது முதல் அவர் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது வரையிலான சம்பவங்களை காட்சிப்படுத்தி இந்த படத்தை ஐஸ்வர்யாக உருவாக்க இருக்கிறார். படத்தில் மாரியப்பனாக நடிப்பது யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...