News
Loading...

திமுகவில் சேர்வது உறுதி!? ஜெ., கொடுத்த காரை ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!!

திமுகவில் சேர்வது உறுதி!? ஜெ., கொடுத்த காரை ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!!

திமுகவின் முக்கிய தலைவராக இருந்து வந்தவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் கைகோர்த்தவருமான நாஞ்சில் சம்பத், மனக்கசப்பு காரணமாக அதிமுகவில் இணைந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாச்சாளர்களில் ஒருவராகவும், கொள்கைபரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.  பல லட்சம் மதிப்புடைய இன்னோவா காரை முதல்வர் ஜெயலலிதாவே நேரில் வழங்கினார்.

மேலும், நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக பெரும் செல்வாக்காக அவர் திகழ்ந்தார்.

மகள் மதிவதனிக்கு வைகோ தலைமையில் திருமணம் செய்வேன் என காத்திருந்தவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்ததுபோல ஜெயலலிதா தலைமையிலேயே சென்னையில் திருமணம் நடைபெற்றது.

ஆனால், அவருக்கு அடுத்த ஆபத்து காத்திருந்தது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின்பொது பேட்டிகளில் சில உண்மைகளை கூறிவிட்டாராம். அதனால்தான் நாஞ்சில் சம்பத்தின் பதவிகள் பறிபோனதாக சொல்லப்படுகிறது. பேச்சாளர் பதவி மட்டுமே ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் கட்சியிலிருந்து அவரை ஓரங்கட்டத் தொடங்கினர்.

இந்நிலையில், ஜெயலலிதா காலமானதையடுத்து, நாஞ்சில் சம்பத் திமுகவில் சேரப்போவதாக வதந்திகள் செய்திகள் வெளியாகின. அந்த செய்தி வதந்தி என அவரின் மகள் மதிவதனியும் மறுத்தார்.

ஆனால், நாஞ்சில் சம்பத், இன்று காலை திடீரென  தனக்கு அளிக்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திமுகவில் சேருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்