News
Loading...

ரூ.243 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: OPS தொடங்கி வைத்தார்

ரூ.243 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: OPS தொடங்கி வைத்தார்

243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தலைமைச் செயலகத்தில், 2016-2017ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 6,19,282 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, 2016-2017ஆம் கல்வியாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 7 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்