News
Loading...

சபாநாயராகிறார் பன்னீர்செல்வம்.. ஓபிசை டம்மியாக்க சசிகலா தரப்பு பக்கா பிளான்?

சபாநாயராகிறார் பன்னீர்செல்வம்.. ஓபிசை டம்மியாக்க சசிகலா தரப்பு பக்கா பிளான்?

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மத்திய அரசின் ஆதரவால் பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இதனை சசிகலா தரப்பு விரும்பவில்லை. ஒருவழியாக பல நாடகங்களை அரங்கேற்றி ஒரு வழியாக சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாராக பதவி ஏற்றுள்ளார். அதே போல முதல் அமைச்சர் பதவியை கைப்பற்றவும் காய்களை நகர்த்தி வருகிறார்.

அப்படி ஒருவேளை சசிகலா முதல்அமைச்சரானால் பன்னீர் செல்வம் மூலம் எந்த தொந்தரவும் ஏற்பட கூடாது என்பதில் மன்னார்குடி தரப்பு கவனமாக உள்ளது. மேலும் இனி அதிமுகவில் பன்னீர் செல்வம் தலையெடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இதற்காகவே பன்னீர்செல்வத்தை எப்படி டம்மியாக்குவது என தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பன்னீர் செல்வத்தை சபாநாயகராக்கி விட்டால் அவர் வசம் உள்ள கட்சி பொருளாளர் பதவியையும் பறித்து விடலாம். கட்சியிலும் ஆட்சியிலும் தலையெடுக்கவே முடியாத சூழ்நிலையை உருவாக்கி விடலாம்.

தற்போதைய சபாயநாயகர் தனபாலை அமைச்சர் ஆக்கி விடலாம் என மன்னார்குடி தரப்பு பக்கா பிளான் போட்டு வைத்துள்ளனர். மன்னார் குடியின் தூண்டிலில் பன்னீர் செல்வம் சிக்கினர் அவரின் அரசியல் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும் என கவலைபடுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்