News
Loading...

இந்தப் பெண்ணிற்கு போலீஸ் செய்த நயவஞ்சகம்..! உண்மையில் நடந்த அவலம்….

இந்தப் பெண்ணிற்கு போலீஸ் செய்த நயவஞ்சகம்..! உண்மையில் நடந்த அவலம்….

சென்னை, அலங்காநல்லூர், மதுரை, கோவை என பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது.

அவா்களை கலைப்பதற்கு, கண்ணீர்ப் புகைவீச்சு, தடியடிப் பிரயோகம் செய்தனர் போலீசார்

இதனால், பெரும் கலவரமே வெடித்திருக்கிறது. விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்களிலோ, போராட்டம் நடத்தியவர்களை வேறு விதத்தில் அப்புறப்படுத்தி இருக்கின்றனர்.

சிவகாசியில் பந்தலில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்கள் ஒதுங்குவதற்கு கழிப்பறை வசதி எதுவும் இல்லாத சூழ்நிலை.

பேருந்து நிலையத்துக்கு பின்புறம் உள்ள எஸ்.வி. லாட்ஜ் நிர்வாகம், அந்த வசதியை தங்களின் விடுதியிலேயே ஏற்படுத்தி தந்தது.

இதில் கொடுமை என்னவென்றால், போராட்டம் நடந்த இடத்துக்கு பின்புறம் டாஸ்மாக் ஒயின் ஷாப் இருக்கிறது.

இங்கு மது அருந்திய குடிமகன்கள், இயற்கை உபாதைகளுக்காக எஸ்.வி. லாட்ஜ் பக்கம் சென்ற போராட்ட மகளிரை, ஆபாசமாகப் பேசி கேலி செய்திருக்கின்றனர்.

இந்த விஷயத்தை பந்தலில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், மைக்கில் தெரிவித்துவிட, போராட்டம் நடத்தியவர்கள “அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.” என்று ஆவேசமானார்கள்.

போலீஸோ கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, போராடியவர்கள் பக்கம் பாய்ந்தது.

“நீங்கள் மைக்கில் பேசுவதற்கெல்லாம் அனுமதி வாங்கவில்லை. முதலில் மைக்கை அப்புறப்படுத்துங்கள்.” என்று அழுத்தம் கொடுத்தனர்.

டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதை அறிந்து நொந்துபோன இளைஞர்களை மேலும் நோகடிக்கும் விதமாக “போராட்ட பந்தலுக்குள் குறிப்பிட்ட சாதியினர் சதி திட்டத்தோடு ஊடுருவி இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட மதத்தவரும் இங்கு இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. இங்கு போராட்டம் நடத்தக் கூடாது.

” என்று கண்டிப்பு காட்ட, மாணவர்கள் தரப்பு போராட்ட பந்தலில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் பெயரையும் ஊரையும் எழுதி வாங்கி,

“நீங்கள் சொல்வது போல் யாரும் இல்லை..” என்று காவல்துறையினரிடம் காட்டியது.

ஆனாலும், போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட, வேறு வழியில்லாமல் தேசிய கீதம் பாடிவிட்டு மாணவர்களும் பொதுமக்களும் கவலையோடு கலைந்து சென்றார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்