News
Loading...

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உயர்நீதின்மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உயர்நீதின்மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

மிழக விவசாயிகள் தற்கொலை தொடர்பாக சென்னை உயர்நீதின்மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வட கிழக்கு, தென் மேற்கு பருவமழை பொய்த்ததால் விவசாய நிலங்கள், வரண்டு காணப்படுகின்றது. தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வாடியது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 32 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிலும் ஒரே நாளில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம்.

இந்நிலையில் விவசாயிகளின் தற்கொலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்