News
Loading...

ராகவா லாரன்ஸ் உள்நோக்க திருகு தாளங்கள் கசிந்தது….?

ராகவா லாரன்ஸ் உள்நோக்க திருகு தாளங்கள் கசிந்தது….?

ராகவா லாரன்ஸ் உள்நோக்கத்தோடு ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டாரா? என்பது சிலரின் கேள்வியாக இருந்தது. இப்போது அவர் செய்த ஒரு காரியத்தின் மூலம் அது பலரின் கேள்வியாகி விடும் போல இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் மெரினா போராட்டத்தில் திடீர் என்று என்ட்ரி ஆனார். 1 கோடி வரை இந்த போராட்டத்திற்கு செலவு செய்கிறேன் என்றார். அப்படி சொன்னவுடன்,’ எல்லா மக்களும் தங்களால் ஆன உதவிகளை செய்யும்போது, இவர் ஏன் நடுவில் வந்து பப்ளிசிட்டி தேடணும்’ என்று வருத்தப்பட்டனர்.

அதன்பின் லாரன்ஸ் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தார். நடுவில் ஜுரம் என்று மருத்துவமனைக்கு திரும்பினார். மீண்டும் மெரினாவுக்கு திரும்பி வந்தார். ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். நான் உங்களுக்காக வந்துவிட்டார் என்றார். தடியடிக்கு முதல் நாள் மாலை கிளம்பி ஹாஸ்பிடலுக்கு மீண்டும் சென்றார்.

காலையில் தடியடியின்போது, மெரினாவுக்குள் உள்ளே போக முயற்சி செய்தார். அப்புறம் உள்ளே போய், சமாதானம் பேசினார். பிரஸ் மீட் வைத்தார். இப்போது, நேற்று இரவு எரிக்கப்பட்ட மீனவர் குப்பத்திற்கு 10 லட்சம் பணம் தருவதாக அறிவித்தார்.

இது வரை ஓகே.ஆனால், ஒரு சிலர் அவர் எதற்கு மெடிக்கல் சர்டிபிகேட்டை வாங்கி மீடியாவுக்கு தந்தார்? எதற்கு சீன் போடுகிறார்? தன் படம் சிவலிங்காவை ஓட வைக்கவா? அரசியல் ஆசையிலா? எந்த உள்நோக்கம் என்று சொல்லுங்கள் என்று லாரன்ஸ் மீது அதிருப்தி கிளம்பி இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் உள்நோக்க திருகு தாளங்கள் கசிந்தது….?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்