News
Loading...

பன்னீரின் கையெழுத்து எங்கே? விரட்டப்பட்ட தம்பிதுரை – சசிகலா….

பன்னீரின் கையெழுத்து எங்கே? விரட்டப்பட்ட தம்பிதுரை – சசிகலா….

ஜெ., மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரான சசிகலா, அடுத்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பன்னீர்செல்வத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால், சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என தம்பித்துரை தனது லெட்டர் பேடு மூலம் அறிக்கை விட்டிருந்தார். அதற்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தாலும், அவரது பெயரையோ, உத்தரவுகளையோ தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பொருட்டாக எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கிய இளைஞர்களின் கொந்தளிப்பால், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

மேலும் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் சசிகலா எழுதிய கடித்தை கொடுக்க சென்றுள்ளனர்.

பிரதமரை சந்திக்க வேண்டுமென்றால், பிரதமர் அலுவலகத்தில் முறையான அனுமதி வாங்க வேண்டும். முதல்வரின் அதிகாரப்பூர்வ கடிதம் வேண்டும். இது எதுவுமில்லாமல் சசிகலா எழுதிய கடிதத்தோடு சென்றதால் பிரதமரை சந்திக்க முடியாமல், பிரதமர் அலுவலக செயலரிடம் கொடுத்துவிட்டு திரும்பியிருக்கின்றனர்.

ஆனால், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தம்பித்துரை அறிக்கை விட்டுள்ளார். பிரதமர், கென்ய அதிபரை சந்திக்க இருப்பதால் தான் தங்களை சந்திக்க முடியவில்லை என்று அறிவித்திருக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...