News
Loading...

15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..!!

15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா என்ற சின்னம்மா, பொதுக்குழுவின் ஒப்புதலையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும், கட்சியின் தலைமையும், ஆட்சி அதிகாரமும் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும். எனவே, சின்னம்மாதான் முதல்வராக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மன்னார்குடியில் உள்ள குடும்ப ஜோதிடர் ஒருவர் கூறுகையில், மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சசிகலாவுக்கு சூரியன் 10வது இடத்தில் இருப்பதாகவும், ஜனவரி 15ம் தேதிக்குப்பிறகு 11வது இடத்திற்கு சூரியன் மாறுகிறார்.

இதனால் சூரியன் 10ம் இடத்தில் இருக்கும்போதே சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்