News
Loading...

சின்னம்மா ஒரு நாள் பிரதமராவார், ஜெயாவால் முடியாது! சின்னம்மாவால் மட்டுமே முடியும்

சின்னம்மா ஒரு நாள் பிரதமராவார், ஜெயாவால் முடியாது! சின்னம்மாவால் மட்டுமே முடியும்

ரு தனியார் தொலைகாட்சியில் வழக்கம் போல மாலை பஞ்சாயத்து நடந்தது.

அதில் சின்னம்மாவின் கொள்கைபரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியும் கலந்து கொண்டு பொங்கினார்.யாரையும் பேசவே விடவில்லை.நிகழ்ச்சி நடத்தும் அந்த பரிதாப ஜீவன் எவ்வளவு கெஞ்சியும் அடங்க மறுத்து அத்து மீறிக்கொண்டே இருந்தார் சரஸ்வதி.

அதில் திமுகவின் தஞ்சை மாவட்ட தலைமைக் கழக பேச்சாளர் கவியன்பன் முதல்வர் பதவி என்பதன் முழு அர்த்தாமாவது சசிகலாவிற்கு தெரியுமா என்றாராம்.அதற்கு ஆவேசமான சரஸ்வதி, ஜெயாவால் முடியாத அத்தனை சாதனைகளையும் சின்னம்மாவால் மட்டுமே செய்ய முடியும்.

அதுமட்டுமல்ல சின்னம்மா முதலில் முதல்வர் அடுத்து கொஞ்ச நாட்களில் பிரதமர் ஆவார். இது நடக்கிறதா இல்லையா என்று மட்டும் பொறுத்திருந்து பாருங்கள் என்று ஒரு போடு போட மொத்த சபையும் ஆடிப் போய்விட்டது என்கிறார்கள்.

கவியன்பன் எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறி எழுந்து போய் விட்டாராம். என்னத்தை சொல்ல..!? பேசறத்துக்கும் ஒரு அளவு இல்லியா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்