News
Loading...

ஓட்டம் எடுக்க தயாராகும் சசிகலா

ஓட்டம் எடுக்க தயாராகும் சசிகலா

மிழக பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் 97 சதவீதம் பேர், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா வந்ததற்கும், விரைவில் முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவா் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் கூறும்போது,

” ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, சசிகலா கட்சியை தனது கையில்தான் வைத்திருந்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு தனது குடும்ப உறுப்பினா்களை பொறுப்பாளா்களாக நியமித்திருப்பார்.

அவா்கள் சொல்லும் ஆட்களுக்கு கட்சியில் பதவி, எம்.எல்.ஏ சீட், எம்பி சீட் வழங்கி வரப்பட்டது.

எம்எல்ஏக்கள் ஏதாவது செய்து பணம் சோ்த்தது தெரிந்தால் கார்டனுக்கு அழைத்து சென்று அனைத்தையும் பிடிங்கிவிட்டு அனுப்புவது தான் சசிகலா கும்பலின் வேலையாகவே இருந்து வந்தது.

அமைச்சராக இருந்தால் சின்னம்மா சொன்னதைதான் செய்ய முடியும். கேட்ட இடத்தில் கேள்வி கேட்காமல் கையெழுத்து போட வேண்டும்.

விளைவுகளை பற்றி எதிர் கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேட்பார் என்று தெரிந்தாலே அவருக்கு அமைச்சா் பதவி போய்விடும்.

இது அதிமுகவில் உள்ள அடிமட்ட தொண்டனுக்கு கூட தெரியும். இருந்தாலும் ஜெயலலிதாவை கையில் வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் போட்டனா்.

ஒ.பி.எஸ். எதிர்ப்பார் அவரின் பின்னால் சென்று விடலாம் என்று எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் காத்து இருந்தனா்.

ஆனால் அவரின் குடுமி சசிகலாவின் கையில் உள்ளது. அதனால் அவா் எதிர்க்க ஆசைப்பட்டாலும் முடியாத நிலையில் தவித்து வருகிறார்.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்று எம்எல்ஏக்கள் எம்பிக்கள், காத்து உள்ளனா். நிச்சயம் அவா் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்வது உறுதி.

அவ்வாறு சென்றால் சசிகலாவை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒட்டு மொத்தமாக வெளியேற்றிவிடலாம் என்று காத்துள்ளனா்.

எம்எல்ஏக்களின் அமைதி ஒருநாள் அதிரடி புரட்சியாக வெடிக்க தயாராக உள்ளதாகவும் சசிகலாவிற்கு எதிரான தரப்பினரின் கருத்தாக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...