News
Loading...

தமிழகம் முழுவதும் தீபா 6 நாட்கள் சூறாவளி பயணம்

தமிழகம் முழுவதும் தீபா 6 நாட்கள் சூறாவளி பயணம்

தீபா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

தீபா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தீபா தனது சுற்றுப் பயணத்தை திருச்சியில் வருகிற 5-ந்திகதி தொடங்குகிறார். அப்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தீபாவின் பாதுகாப்புக்காக அவரது தீவிர ஆதரவாளர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை தயாரித்து வழங்கும் பணி முடிந்துள்ளது. தீபா சுற்றுப்பயணம் செய்யும்போது இவர்கள் 30 பேரும் அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சுற்றுப்பயணத்தின்போது தீபா கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விண்ணப்பம் ஒன்று வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு நிர்வாகியும் தாங்கள் அ.தி.மு.க.வின் கிளைக்கழகத்தில் எந்த பதவியை வகிக்கிறோம் என்பதை எழுதி, நான் இன்று முதல் தீபாவின் ஆதரவாளராக அவரது தலைமைய ஏற்று பணி செய்ய உறுதி ஏற்கிறேன் என்று எழுதி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை தீபா பெறுகிறார்.

அரியலூர் கல்லூரி சாலையில் ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன் திறந்து வைத்தார்

குமரி மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தீபா பேரவையின் அலுவலகம் நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் திறக்கப்பட்டது. ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தர்மலிங்கம் விழாவில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...