News
Loading...

சசிகலா குடும்ப சொத்தானது அதிமுக..! ஆட்டத்தை துவக்கினா் மன்னார்குடி வகையறாக்கள்.!

சசிகலா குடும்ப சொத்தானது அதிமுக..! ஆட்டத்தை துவக்கினா் மன்னார்குடி வகையறாக்கள்.!

காமராஜா் ஆட்சியில்தான் பல அணைகள், புதிய வாய்க்கால்கள், பல தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டது.

பின்னா் அறிஞா் அண்ணா தலைமையிலான திமுக அரசு வந்தது. அதன் பின்னா் தனது திறமையால் கலைஞா் கருணாநிதி முதல்வரானார்.

பின்பு எந்த ஒரு தேசிய கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவு வெற்றி பெற முடியவில்லை.

பின்னா் திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆா் மற்றும் கருணாநிதி ஆகியோரிடையே பிளவு ஏற்பட்டது.

தொண்டா்களின் விருப்பத்திற்காக எம்.ஜி.ஆா் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகம் என்கிற கட்சியை உருவாக்கினார்.

பின்னா் முதல்வரானார். தொடா்ந்து 13 வருடங்கள் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆா் இருக்கும் வரை திமுக தலைவா் கருணாநிதியால் முதல்வா் பதவிக்கு வரமுடியவில்லை.

எம்.ஜி.ஆா் 1987-ல்  இறந்தார். பின்னா் அதிமுக இரண்டாக உடைந்தது. 1989-ல் திமுக தலைவா் மீண்டும் முதலமைச்சா் ஆனார்.

1991ல் அதிமுகவை முழுவதுமாக கைப்பற்றினார் ஜெயலலிதா. பின்னா் ஒரு முறை அதிமுக, மறுமுறை திமுக என மாறி, மாறி ஆண்டு வந்தனா்.

கடந்த தோ்தலில் ஜெயலலிதா அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இது வரலாறு.

ஒன்று பட்ட  தஞ்சை மாவட்டத்தை சோ்ந்த கலைஞா் கருணாநிதி,திமுகவை கைப்பற்றிய பின்பு அது அவரது குடும்ப சொத்தாக மாறியது அனைவரும் அறிந்ததே.

அதுபோல ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தை சோ்ந்தவா்தான் சசிகலா தற்போது அதிமுக பொதுச் செயலாளா் பதவியை கைப்பற்றி விட்டார்.

இனி, அதிமுக அவரது குடும்பத் சொத்தாக மாறிவிடும் என்று அதிமுகவினா் தரப்பில் கூறப்படுகிறது.

1991 முதல் தங்கள் ஆட்டத்தை துவக்கினா் மன்னார்குடி வகையறாக்கள். அது ஒரு அளவுதான் ஜெயலலிதாவால் கட்டுப்படுத்த முடிந்தது.

2011-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மன்னார்குடியை கட்டுப்படுத்த அவா்களை ஒட்டு மொத்தமாக கட்சி மற்றும் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார்.

சில மாதங்களில் மீண்டும் சசிகலா மட்டும் சோ்த்துக் கொள்ளப்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே. மன்னார்குடி வகையறாக்கள் ஆட்டத்தை துவக்கினர்.

அவா்களின் அச்சுறுத்தல் காரணமாகவே அதிமுகவில் பொதுச் செயலாளராக சசிகலா வரமுடிந்தது என்றும் கூறப்படுகிறது.

தமிழக மின்வாரியத்தில் நீலகிரி மாவட்டம் குந்தா பாலம் பணிக்கான டெண்டர் தேதி, டிச., 21 என, முதலில் குறிப்பிடப்பட்டது. பின், மன்னார்குடி சொந்தங்கள் குறுக்கீடுகளால் தேதி நீட்டிக்கப்பட்டது.

குந்தா பாலம் அணை துார்வாரும் பணியை, சேகர் ரெட்டி ஆதரவாளருக்கு வழங்கும்படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி  கொடுத்து மன்னார்குடி வகையறாக்கள் ஆட்டத்தை ஆரம்பித்தனா்.

இனி அதிமுகவில் பதவிக்கு ஒரு விலை என்று அனைத்து பதவிக்கும் விலைபட்டியல் தயாராகிவிடும்.இனி அனைத்தும் அதிமுகவில் அப்படிதான் நடக்கும் என்று அதிமுக முக்கியஸ்தா்களே குமுற ஆரம்பித்துள்ளனா்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்