News
Loading...

காந்தி படம் இல்லாமல் வெளிவந்த 2000 ரூபாய் நோட்டு

காந்தி படம் இல்லாமல் வெளிவந்த 2000 ரூபாய் நோட்டு

த்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத 2000 ரூபாய் நோட்டு வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம், சொபூரில் விவசாயி ஒருவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுத்துள்ளார். அவர் எடுத்த 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த எஸ்பிஐ வங்கியின் அதிகாரி ஆர் கே ஜெயின் கூறும்போது, “இது போலியானதோ அல்லது கள்ள நோட்டோ கிடையாது. இந்த நோட்டில் அச்சுபிழை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆர்பிஐ க்கு புகார் அளித்துள்ளோம்.” என கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...