சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் ரோட்டில் செருப்பு தைத்துக் கொண்டிருந்தார் ஒரு சகோதரர்.
அவரை கொஞ்சம் வித்தியாசமாக அனைவரும் பார்க்க, நாமும் அருகில் போனோம். அவர் அருகே ஒரு ஸ்வைப் மெஷின் இருந்தது.
அருகே ஒருவர் தனது டெபிட் கார்டால் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். நாம் அவரிடம் போய் மெல்ல பேசுக் கொடுத்தோம்.
அவர் பெயர் அய்யனார். பிரதமர் மோடி கருப்பு பண ஒழிப்பை மேற்கொண்டதே எங்களைப் போன்ற ஏழைகள் நலமாக வாழ வேண்டும் என்றுதானே, மோடி கனவு காண்கிறார்.
அந்தக் கனவு நிறைவேறினால் இந்தியாவே மாறி விடும் ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகள் போய் விடும் லஞ்சம் வாங்குவது அடியோடு நின்று விடும்.
அவற்றின் கனவை நிறைவேற்ற நாமும் மாறிக்கொள்ள வேண்டும் அதுதான் முதல் வேலையாக ஸ்வைப் மெஷின் வாங்கி விட்டேன். என்று அசத்தினார்.
குட்…! இந்திய மாற்றத்தை நோக்கி போகிறது என்பது உண்மை தான்..!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்