News
Loading...

சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்

சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்

த்தூர்: தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற 6கோட்டங்களிலும் பொதுமேலாளர் தலைமையிலான தலைமையக அதிகாரிகள் குழுவினர் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோகிரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், சேலம் கோட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ஆத்தூர் ரயில்நிலையத்தில் சூரியசக்தி மின்சாரம் (சோலார்) பயன்படுத்தப்படும்  பசுமை ரயில் பெட்டிகளை கொண்ட ‘கோகிரீன்கோச்’ திட்டத்தை துவக்கி வைத்தார். இது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோகிரி கூறியதாவது: புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை பயன்படுத்துவதற்கு தென்னக ரயில்வே மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ‘கோகிரீன்கோச்’ என்ற அடிப்படையில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட ரயில்பெட்டிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

இதில் தென்மாநிலத்தின் முதல் முறையாக கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் பசுமை ரயிலாக மாற்றப்படும். சோதனை அடிப்படையில் ரயில் பெட்டிகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகளை பொருத்தி மின்விளக்குகள், மின் விசிறி  போன்றவை இயக்கப்படும். சேலம் ரயில்வே கோட்டத்திற்காக இந்த திட்டத்தை ‘இந்த்-ஆஸி’ சோலார் நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளது என்றார். இந்த்-ஆஸி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்ட வளர்ச்சி இயக்குநர் பாலாபழனி கூறியதாவது: ரயில்பெட்டியில் உள்ள அனைத்து மின்விளக்குகள், பேன்கள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்க கூடியவகையில் ஜனசதாப்தி ரயிலின் பெட்டிகள் மீது 16 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மின்விளக்குகள், பேன்களுக்கு தேவைப்படும் 4.8கிலோவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வசதி இந்தியாவிலேயே முதலில் இந்த ரயிலில் தான் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் ரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் கொடுக்கும் பேட்டரிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பேன்கள், விளக்குகளுக்கு மட்டுமல்ல, நாள் முழுவதும் பயன்படும் மின்சாரத்தையும் தயாரிக்கலாம். ரயில் பெட்டிகளின் மீது 4அடுக்கு பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. சோலார் மின்சார பயன்பாட்டால் ஓராண்டுக்கு 700 லிட்டர் டீசல் மிச்சமாகும். காற்றில் மாசுகளும் வெகுவாக குறையும்.  இவ்வாறு பாலாபழனி கூறினார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...