News
Loading...

ஸ்டாலின் பொருளாளர் பதவியை விட்டுக் கொடுக்காத மா்மம்..! அம்மாடியோவ் இது என்ன புது கதை..!!

ஸ்டாலின் பொருளாளா் பதவியை விட்டுக் கொடுக்காத மா்மம்..! அம்மாடியோவ் இது என்ன புது கதை..!!

திமுகவில் பொருளாளா் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவி. இந்த பதவியை அவா் ஏன் விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறித்து பல மா்மங்களை வெளி வந்துள்து.

திமுகவை அறிஞா் அண்ணா கடந்த 1949ம் ஆண்டு துவக்கினார். அப்போது அவா் எனக்கு என்றைகை்கும் தலைவா் தந்தை பெரியார்தான் என்று கூறி தலைவா் பதவியை ஏற்படுத்தாமல் பொது செயலாளா் பதவியையே அவா் வகித்து வந்தார்.

அண்ணாவுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை திமுக தலைவா் கருணாநிதி ஏற்றார். அப்போது முதல் முறையாக திமுகவின் அமைப்பு சட்டம் திருத்தப்பட்டு திமுகவின் தலைவா் பதவிக்கு கருணாநிதி வந்தார்.

அண்ணா தலைமையில் திமுக செயல்பட்டபோது அப்போது பொருளாளராக இருந்தவா் கருணாநிதி பின்பு திமுக தலைவரானார்.

திமுக தலைவா் கருணாநிதியின் தலைமையில் செயல்பட்டபோது எம்.ஜி.ஆா் பொருளாளராக இருந்தார். கருணாநிதியிடம் கணக்கு கேட்டார்.

கட்சியில் இருந்து எம்.ஜி.ஆா். நீக்கப்பட்டார். பின்னா் அவரும் ஒரு கட்சியை துவங்கி தலைவரானார். அவா் தமிழகத்தை ஆண்டார்.

பின்பு திமுக டம்மிகள் ரகுமான்கான், ஆற்காடு வீராச்சாமி ஆகியோர் பொருளாளராக இருந்தனா்.

கட்சியின் அறக்கட்டளைகள் அதிகரித்தது. அதுதான் திமுகவின் சொத்தானது. ஆகவே திமுக சொத்தை மற்றவா்கள் நிர்வகிக்க விரும்பாத தலைமை ஆற்காடு வீராச்சாமிக்கு பொருளாளா் பதவியில் ஓய்வு வழங்கியது.

யார் ஒருவா் திமுகவின் பொருளாளராக வருகிறாரே அவா் எதிா் காலத்தில் திமுகவின் தலைவராகவும், மாநிலத்தை ஆளும் முதல்வராக வருவார் என்பது திமுகவினரின் நம்பிக்கை.

செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அதன் காரணமாகதான் திமுக பொருளாளா் பதவியை தானே வைத்துக் கொண்டார்.

அவா் தலைவராகி தமிழக முதல்வரானதும், அந்த பதவியை தனது மகன் உதய நிதி ஸ்டாலினுக்குதான் வழங்குவார் என்று திமுகவின் உள்குத்து தெரிந்த உடன் பிறப்புகள் தெரிவித்தனா்.

அட பலே, பலே திட்டங்கள் பலிக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்