News
Loading...

மாணவர்களை முழுமையாக விடுவிக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

மாணவர்களை முழுமையாக விடுவிக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து முழுமையாக விடுவிக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று படித்த அறிக்கையில், 23.1.2017 அன்று நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 312 பேர்களும், பிற மாவட்டங்களில் 175 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரும், இதர மாவட்டங்களில் 15 பேரும் மாணவர்கள். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...