News
Loading...

சின்னம்மா போட்ட பிச்சையால் ஜெயலலிதா தப்பினார்..! வளர்மதி அதிரடி பேச்சு..!

சின்னம்மா போட்ட பிச்சையால் ஜெயலலிதா தப்பினார்..! வளர்மதி அதிரடி பேச்சு..!

பொதுக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பாலோனோர் சசிகலாவுக்கு ஜால்ராவே போட்டு வந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரான பா.வளர்மதி பொதுக்குழுவில் பேசியதாவது,  அவரது பேச்சு பொதுக்குழுவினரையே அதிர செய்துவிட்டதாம். பொதுக்குழு மற்றும் செயற்குழுவினர்களும் வாயடைந்து போய்விட்டனர்.

வளர்மதி:

1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார்.

அதிமுகவும் இருந்திருக்காது என்று பகீர் தகவலை கொடுத்து அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சின்னம்மா போட்ட பிச்சை தான் ஜெயலலிதா முதல்வராக இருந்தது. சின்னம்மா நினைத்திருந்தால், ஜெயலலிதாவும் எப்போதோ காணாமல் போய் இருப்பார். என்று பொங்கினார். ஒரு நிமிடம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிப் போனார்கள்.

பொன்னையன்:

அதிமுக கொள்கை பரப்பு செயலாளரான பொன்னையன்,  அதற்கு ஒருபடி மேலே சென்று, சின்னம்மா மட்டுமல்ல, சின்னம்மா குடும்பமே அதிமுக எனும் கட்சிக்கு ஓடாய் உழைத்தது என ஒரே போடாய் போட்டார்.

எம்ஜிஆர் காலகட்டத்தில் அதிமுகவினரால் கொடிக்கூட ஏற்ற முடியாத நிலை இருந்தது. சின்னம்மா சகோதரர் திவாகரன், அரிவாளுடன் சென்று பல கிராமங்களில் அதிமுக கொடியேற்றினார் என பரபரத்தார்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவை பார்க்கவிடாததற்கு ஒரே காரணம், அம்மாவுக்கு இன்பெக்ஷன் ஆகிவிடும் என்பது மட்டுமல்ல, அந்த இன்பெக்ஷ்ன் உங்களுக்கு வந்துவிடும் என்பதால்தான்  இந்த முடிவை எடுக்கப்பட்டதாக பொன்னையன் கூறியது அதிமுக உண்மை தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை தோற்றுவித்ததாம்.

வெறும் தலையாட்டி பொம்மைகளாகவும், செம்மறியாடுகளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த கூட்டம், ஜெ., இருக்கும்வரை ஒரு வார்த்தைகூட பேச அருகதையற்ற, அடிமைகள், இன்று அவர் இல்லை என்றதும் வாய்க்கு வந்ததெல்லாம் உளறுகிறார்கள் என்று பல உண்மை விசுவாசிகள் முணுமுணுத்தனர்.

பொதுக்குழுவில் அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சை, விலாவரியாக வெளியிட்டுள்ளது பிரபல தமிழ் வாரம் இருமுறை வெளியாகும் இதழ்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...