News
Loading...

வாகன சோதனையின் மூலம் பல லட்ச ரூபாயை சுருட்டிய போலீசார்

வாகன சோதனையின் மூலம் பல லட்ச ரூபாயை சுருட்டிய போலீசார்

ர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்டம் முழுவதம் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாகன சோதனையின் போது குடிபோதை, லைசென்ஸ் இல்லாதது, ஹெல்மட் அணியாதது மற்றும் வேகமாக வாகனம் ஓட்டுதல் உள்பட பல்வேறு குற்றங்களுக்கு போலீசாரால் அபாராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தர்மபுரி வள்ளலார் திடல் பகுதியில் சட்டம் ஓழுங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரிஷா ராணி தலைமையில் போலீசார் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக தர்மபுரியை சேர்ந்த மாது என்பவரது மகன் நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மட் அணியாதது மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாகவும் அபராதம் விதித்தனர்.

அதற்காக 15 சி 5258365 என்ற வரிசை எண் கொண்ட ரசீதை நேற்றிரவு 8 மணி 6 நிமிடத்திற்கு வழங்கினர். இந்த ரசீதில் வாகன எண் டி.என்.29 பிபி.4173 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் 3 ஆயிரம் ரூபாயுடன் போலீஸ் நிலையத்திற்கு நாளை காலையில் வருமாறும் பின்னர் கோர்ட்டில் அபராதம் செலுத்துமாறும் கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த கோவிந்தன் என்பவரது மகன் பூபதி என்பவருக்கும் அதே போல அபராதம் விதித்து 8 மணி 10 நிமிடத்திற்கு ரசீது வழங்கினர்.

இந்த ரசீதில் மோட்டார் சைக்கிள் பதிவு எண் டி.என்.29 ஏ.பி.4173 என்று போலியாக எழுதப்பட்டுள்ளது. நகராஜிக்கு கொடுத்த ரசீதில் வாடிக்கையாளர் காப்பி என்றும், பூபதி கொடுத்த ரசீதில் போலீஸ் காப்பி என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் 2 ரசீதுகளிலும் உள்ள வரிசை எண்கள் ஒரே எண்களாக உள்ளது தான் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து விசாரித்த போது இதில் ஒருவருக்கு வாடிக்கையாளர் ரசீதையும், மற்ற ஒருவருக்கு போலீசார் வைத்து கொள்ள வேண்டிய ரசீதையும் கொடுத்து போலீசார் மோசடி செய்தது தெரியவந்தது.

வாகன சோதனையின் மூலம் பல லட்ச ரூபாயை சுருட்டிய போலீசார்

இதில் வாடிக்கையாளருக்கான காப்பியை கொடுத்த நகாராஜிக்கு மட்டும் கோர்ட்டில் அபராதம் செலுத்தி விட்டு பூபதியிடம் அபாராத தொகையை வாங்கி போலீசாரே எடுத்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.இதன் மூலம் பல லட்ச ரூபாயை போலீசார் சுருட்டியதாகவும் தெரிகிறது. இதைனை அறிந்த உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கடந்த காலங்களில் வாகன தணிக்கையின் போது சிக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதித்ததற்கான போலீசார் காப்பி ஸ்டேசனில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். விசாரணையின் முடிவில் மேலும் பல போலீசார் மற்றும் அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. இதனால் தர்மபுரி மாவட்ட போலீசாரிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மேலும் பல பகுதிகளில் வாகன தனிக்கையில் விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் போது ரசீதே வழங்காமல் அபாராத தொகையை மட்டும் வாங்கி கொள்வதாகவும் வாகன ஓட்டிகள் போலீசார் மீது புகார் கூறுகிறார்கள். இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...