News
Loading...

காதலர் தினம் உருவானது எப்படி? – தலை துண்டிக்கப்பட்ட தினமே காதலர்தினம்!

காதலர் தினம் உருவானது எப்படி? – தலை துண்டிக்கப்பட்ட தினமே காதலர்தினம்!

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின்முட்டாள் தனமான கட்டளைகளால் அவனது இராணுவ வீரர்கள் அவனை விட்டு விலகிப் போயினர்.

புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை.

திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள்.

போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்ற உடனே அமைச்சரை அழைத்து “ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது.

ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள்.

பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப்படுவார்கள்.” என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று கூறி கிறிஸ்தவ பாதிரியரான வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத்திருமணங்களைச் செய்து வைத்தார்.

இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை
விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் உண்டானது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. வலண்டைன் மரணிக்க முன் அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையில் கவிதை ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அந்த கவிதை வரிகள்…

விழி இருந்தும்
வழி இல்லாமல் – மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து – பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் – நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

– உன்னுடைய வலண்டைனிடமிருந்து! –

பாதிரியார் வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் கி.பி.270 வது வருடம் – பெப்ரவரி 14ந் திகதி (14.02.270).

ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம்
பாகான் (மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும்
இதுவே காதலர்தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது..

ஆனால் பாதிரியாரான வலண்டைன் ஒரு பெண்ணை எப்படி காதலிக்கலாம் என்றும் அன்பை வருடம் முழுவதும் பரிமாறலாம் அதற்கெண்டு ஒருதினம் அவசியமில்லை இது பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்று சிலரால் இந்த தினமானது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...