News
Loading...

பலாத்காரம் செய்து விடுவோம் இராணுவ வீரரின் மகளுக்கு மிரட்டல்

பலாத்காரம் செய்து விடுவோம் இராணுவ வீரரின் மகளுக்கு மிரட்டல்

டெல்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பிக்கும், இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

இந்நிலையில், கார்கில் போரில் உயிரிழந்த ஒரு ராணுவ வீரரின் மகள் குர்மேகர் கவுர் "என் தந்தையை கொண்றது பாகிஸ்தான் அல்ல, போரில் தான் இறந்தார்" என்று இடது சாரி அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியவாறு ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். 

அவருக்கு ஏ.பி.வி.பி அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பாலியல் “பலாத்காரம் செய்து விடுவோம்” என்றும் “கொலை செய்து விடுவோம்” என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத்தில் அவர் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கவுரின் புகார் மீது உடனடியாக வழக்கு பதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர் சேவாக் அவர்களும், "மூச்சதங்களை அடித்தது நான் இல்லை, என்னுடைய பேட் தான்" என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியவாறு ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...