News
Loading...

சசிகலாவின் 300 முக்கியஸ்தர்கள் தீபாவிடம்!! அச்சத்தில் உறைந்த கார்டன்

சசிகலாவின் 300 முக்கியஸ்தர்கள் தீபாவிடம்!! அச்சத்தில் உறைந்த கார்டன்

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுவிற்கு பிறகு சசிகலாவின் தலைமை பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

அவர்கள், ஜெ.,அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து விருகின்றனர்.

ஜெ.தீபா ஜெ.,பிறந்த நாளான பிப்.,24ம் தேதி தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறிவருகிறார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜெ.தீபா பேரவை துவக்கப்பட்டு வருகிறது. அதில் அ.தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ.,கள், நிர்வாகிகள் தலைமை ஏற்று நடத்தி செல்கின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குடிமங்கலம் பகுயில் அ.தி.மு.க.,வின் 300 கிளைகளை கலைத்துவிட்டு, சுமார் 2 ஆயிரம் பேர் ஜெ.தீபா பேரவையில் இணைந்தனர்.

கோவை முன்னாள் எம்.எல்.ஏ., மலரவன் தலைமையில் பேரவையில் தங்களை இணைத்து கொண்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...