News
Loading...

எடப்பாடிக்கு ஆதரவு அளிக்க எம்எல்ஏக்களுக்கு கிடைத்தது என்ன? நாமக்கல் எம்.பி. பரபரப்பு தகவல்

எடப்பாடிக்கு ஆதரவு அளிக்க எம்எல்ஏக்களுக்கு கிடைத்தது என்ன? நாமக்கல் எம்.பி. பரபரப்பு தகவல்

டப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் பெற்ற பலன்களை விரைவில் அம்பலப்படுத்துவேன் என்று நாமக்கல் எம்பி சுந்தரம் கூறினார்.  நாமக்கல் எம்.பி. சுந்தரம் நேற்று ராசிபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், கட்சி கொடியேற்றி வைத்து அவர் பேசியதாவது: 

 அதிமுக  தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் அணியை ஏற்று வந்துள்ளனர். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி, ஒரு குடும்பத்தின் கைக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது.  எடப்பாடி பழனிசாமி பினாமி முதல்வர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட தினகரன், திடீர் துணை பொதுச்செயலாளர். மன்னிப்பு கேட்டு காலையில் கடிதம் கொடுத்தவருக்கு, மாலையில் துணை பொதுச்செயலாளர் பதவி. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. 

  சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்னென்ன செய்தார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? கூவத்தூர் ரிசார்ட்சில் டான்ஸ் ஆடுவதற்கும், ஜாலியாக சைக்கிள் ஓட்டுவதற்குமா சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்? என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு  எம்எல்ஏக்கள் அடைந்த பலன்களை விரைவில் அறிவிப்பேன். மருத்துவமனையில் 75 நாட்கள் என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும். எம்பிக்கள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம்.  ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது. அதனை வெளியே கொண்டு வர வேண்டும். டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்து, அந்த மர்மத்தை வெளிப்படுத்துவோம். ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...