News
Loading...

அதிமுக எம்.எல்.ஏக்களை பேருந்துகளில் சிறை வைத்த மன்னார்குடி கோஷ்டி! செல்போன்கள் பறிப்பு!!

அதிமுக எம்.எல்.ஏக்களை பேருந்துகளில் சிறை வைத்த மன்னார்குடி கோஷ்டி! செல்போன்கள் பறிப்பு!!

திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேருந்துகளில் சிறைபிடித்து வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி.

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு குடும்பத்தினர் யாருடனும் பேசக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது மன்னார்குடி கோஷ்டி.

அதிமுக பொதுச்செயலர் பதவியை கபளீகரம் செய்த சசிகலா, முதல்வராகவும் பேராசைப்பட்டார். எந்த நேரத்திலும் முதல்வராகிவிடுவார் என கூறப்பட்ட நிலையில் திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

இது அதிமுகவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலுமே பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம் சோழவந்தான் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

பேருந்துகளில் சிறைவைப்பு இந்தக் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக ஏற்பதாக எம்.எல்.ஏ.க்களிடம் கடிதம் எழுதி வாங்கப்பட்டதாம். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 3 பேருந்துகளில் ஏற்றி சென்னை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

3 பேருந்துகளில்… அவர்களது செல்போன்களையும் மன்னார்குடி கோஷ்டி பறித்துக் கொண்டது. தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருந்துகளில் சிறை வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் கண்காணிக்க 4 அடியாட்களையும் நியமித்திருக்கிறது இந்த கோஷ்டி.

டெல்லி விசிட் இன்று இரவு மகாபலிபுரம் அல்லது புதுச்சேரியில் பேருந்துகளிலேயே எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்படலாம் அல்லது ஹோட்டல்களில் தங்க வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்பின்னர் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாம் மன்னார்குடி கோஷ்டி.

அதிமுக எம்.எல்.ஏக்களை பேருந்துகளில் சிறை வைத்த மன்னார்குடி கோஷ்டி! செல்போன்கள் பறிப்பு!!

அதிமுக எம்.எல்.ஏக்களை பேருந்துகளில் சிறை வைத்த மன்னார்குடி கோஷ்டி! செல்போன்கள் பறிப்பு!!

அதிமுக எம்.எல்.ஏக்களை பேருந்துகளில் சிறை வைத்த மன்னார்குடி கோஷ்டி! செல்போன்கள் பறிப்பு!!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...