News
Loading...

இப்ப என் கொடி பறக்குது.. விஸ்வரூபத்திற்கு இதுதான் காரணம்..

இப்ப என் கொடி பறக்குது.. விஸ்வரூபத்திற்கு இதுதான் காரணம்..

துவரை ஜெயலலிதா மற்றும் சசிகலா எது கூறினாலும், சரி என்று மறு பேச்சே பேசாமல் இருந்தவர்தான் பன்னீர் செல்வம். தற்போது சசிகலா குடும்பத்தினர் அவரை புறக்கணித்தபோதும், அவமானப்படுத்திய போதும் பாட்சா படத்தில் அடி வாங்கும் ரஜினி போலவே இருந்தார்.

ஆனால் கடந்த 7ம் தேதி திடீரென பொங்கி எழுந்த பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பினார். இதன் பின்னணியில் திமுக மற்றும் பலமான பின்புலம் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் பகவதி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிவில் கடந்த 6ம் தேதி புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கொடிமரம் முதல்வர் பன்னீர் செல்வம் உபயமாக வழங்கியது. கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட மறுநாள்தான் அதாவது பிப்ரவரி 7ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று முதல்வர் பன்னீர் செல்வம் தனது போராட்டத்தை தொடங்கினார்.

Ñமண்டக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கொடிமரம் தேவைப்பட்டதை அறிந்து அதனை தானே உபயமாக வழங்க முன்வந்தார். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து 51 அடி உயரத்தில் ஒரே தேக்குமரம் அவரது ஏற்பாட்டில் மண்டக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி இந்த கொடிமரத்தை பன்னீர் செல்வம் கொடுத்துள்ளார். அப்போது இருந்தே மூலிகை எண்ணெய் ஊறலில் இருந்த கொடிமரம் கடந்த 6ம் தேதி மண்டக்காடு பகவதி அம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதற்கு அடுத்த நாளே 7ம் தேதிதான் பன்னீர் செல்வம் பொங்கி எழுந்தார். அமைதியானவராக மட்டுமே உணரப்பட்ட முதல்வர் பன்னீர் செல்வம் மண்டக்காடு கோயிலில் கொடி மரம் ஏறியதும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இதற்கு அம்மனின் அளுரும் துணை நிற்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...