News
Loading...

இது சினிமா இல்லை, எங்க வாழ்க்கை விஜயசாந்தியை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்!

இது சினிமா இல்லை, எங்க வாழ்க்கை’’ விஜயசாந்தியை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்!

மிழகத்தில் சசிகலாவின் பினாமி முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விஜயசாந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது சமாதிக்கு வந்திருந்த விஜயசாந்தி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”அதிமுக பிளவுபடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கட்சியை உடைக்க சதி நடக்கும்” என்று தெரிவித்து இருந்தார். தொடர்ந்து மன்னார்குடி மாஃபியா கும்பலிற்கு ஆதரவாகவே பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சசிகலாவின் பினாமி முதல்வராக பதவியேற்று இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விஜயசாந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்து இருக்கும் பிரபல இயக்குநரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், ”விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை!” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...