News
Loading...

? ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி இருந்தது?

? ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி இருந்தது?

! பிரச்னை அதிகம் ஆனதும் உடனடியாக டெல்லி போனார் பன்னீர். இந்த வேகத்தைப் பிரச்னை தொடங்குவதற்கு முன் அவர் காட்டி இருக்க வேண்டும். ‘அவசரச் சட்டத்துக்கு மத்தியத் துறைகள் மூன்றும் அனுமதி தந்தால் மட்டுமே தமிழகம் திரும்புவேன்’ என்று பிடிவாதமாக டெல்லியில் உட்கார்ந்தார் பன்னீர். அது பாராட்டுக்குரியது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைக்கப் போன வேகமும் பாராட்டுக்குரியது. அதே வேகத்தோடு சென்னைக் கடற்கரைக்கு வந்து போராட்டக்காரர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அவர் வராவிட்டாலும் அமைச்சரவைச் சகாக்களையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும். மாணவர் போராட்டம் நடக்கும்போது அபிராமி தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பார்த்துக்கொண்டு இருந்ததால்தான் ‘ஓபி.எஸ்-ஸைக் காணோம்’ என்று கோஷம் போட்டார்கள். 

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிஇருக்கும் கூட்டத்தை வன்முறை மூலமாக கலைக்க போலீஸ் எடுத்த முயற்சியை பன்னீர் தடுத்திருக்க வேண்டும். போலீஸுக்குத் தலையாட்டும் பிள்ளையாக அவர் இருக்கிறார். எவ்வளவு அவமானப்படுத்தினாலும் தனது நாற்காலி நிலைத்தால் போதும் என்று நினைக்கக்கூடாது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...