News
Loading...

காதல்லீலையில் போலீசார்

காதல்லீலையில் போலீசார்

சென்னை மெரினாவில் பாதுகாப்புக்காக வந்திருக்கும் போலீசார்கள் காதல் வலையில் உள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆயுதப்படை போலீசார்கள் பொது இடங்களில், பெண் போலீசாரிடம் காதல் லீலையில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தது. இதில் மாணவர்கள் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதற்கு தமிழகத்தில் பிற பகுதிகளில் உள்ள சக மாணவர்கள் காயமடைந்தவர்களுக்காக மீண்டும் மெரினாவில் போராட்டம் நடத்துவோம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியது.

இதனையடுத்து 144 தடை உத்தரவை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்தார். மாணவர்கள் மெரினா கடற்கரைக்கு மீண்டும் வராமல் தடுப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள் பெண் போலீசிடம் கொஞ்சி பேசும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: மெரினா கடற்கரையை விடுமுறை நாட்களில் கழிப்பதற்காக குடுபத்தோடு வருவோம். ஆனால் தற்போது போலீசார் பொது இடம் என்று பார்க்காமல் பெண் போலீசிடம் அமர்ந்து அரட்டை அடிப்பதும் அவர்கள் அனைவரும் மது அருந்துவதுமாக இருக்கின்றனர்.

இந்த சம்பவத்ததை காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் போலீசுக்கு இருக்கும் கொஞ்சம் மரியாதையும் இழக்க நேரிடும். இவ்வாறு பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்