News
Loading...

உடுமலையில் பாட்டில் இளநீர் அறிமுகம்: ஒரு லிட்டர் ரூ.160-க்கு விற்பனை

உடுமலையில் பாட்டில் இளநீர் அறிமுகம்: ஒரு லிட்டர் ரூ.160-க்கு விற்பனை

மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, பன்னாட்டு குளிர்பானங்களை அருந்தமாட்டோம் என தெரிவித்தனர்.

இதனால் வியாபாரிகள் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் பன்னாட்டு குளிர் பானங்களை விற்க தடை விதிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பெரும்பாலான கடைகளில் குளிர்பானங்கள் விற்பது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக விவசாயிகளே ஒன்றிணைந்து இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்தனர்.

அதன்படி உடுமலை சுற்று வட்டார விவசாயிகள் ஒன்றுசேர்ந்து முதல் முறையாக இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்தனர். இதனால் விவசாயிகள் அவரவர் இடத்தில் இறக்கப்படும் இளநீரை சுகாதாரமான முறையில் பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இதுபற்றி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி நீரா.பெரியசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் அதிக அளவு தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னையை காப்பாற்றி வருகின்றனர்.

பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாகவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பாட்டில்களில் இளநீர் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இளநீர் சத்துமிக்க பானம். அனைத்து வித தாது உப்புகளும், தேவையான குளிர்ச்சி , இதயம், கல்லீரல், கண்களில் வெப்பம் பரவாமல் தடுக்கவும் செய்கிறது. டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்க்கு இளநீர் மருந்தாக பயன்படுகிறது. கோடை காலம் மட்டுமின்றி எல்லா காலத்துக்கும் ஏற்றது.

தற்போது ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.160 ஆகும். மேலும் அரை லிட்டர் ரூ.80-க்கும், கால் லிட்டர் ரூ.40-க்கும் விற்க முடிவு செய்துள்ளோம்.

தற்போது முதல் கட்டமாக பாட்டில்களில் இளநீரை அடைத்து விற்பனை செய்கிறோம். இனி தேங்காய் மூலமாக தயாரிக்கப்படும் தேங்காய் பால், ஸ்ட்ரா பெரி, வெண்ணிலா, ஜஸ்கீரிம் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை விரைவில் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடுமலையில் பாட்டில் இளநீர் அறிமுகம்: ஒரு லிட்டர் ரூ.160-க்கு விற்பனை

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...