News
Loading...

புதிய கட்சி தொடங்கி எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் சபதம்

புதிய கட்சி தொடங்கி எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் சபதம்

ம்ஜிஆர்., அண்ணன் மகன் சந்திரன், புதிய கட்சி துவக்கி உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில், வேட்பாளரை நிறுத்த போவதாகவும் அறிவித்துள்ளார். 

அ.தி.மு.க.,வானது, தற்போது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதற்கிடையில், ஜெ., அண்ணன் மகள் தீபாவும், தன் பங்கிற்கு, ‘எம்.ஜி.ஆர்., – அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை துவக்கி, நடத்தி வருகிறார். ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் சந்திரன், ஞாயிற்றுக்கிழமை திருச்சி காட்டூரில், ‘அண்ணா – எம்.ஜி.ஆர்., – அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற, புதிய கட்சியை துவங்கினார்.

அதற்கான கொடி மற்றும் தொழிற்சங்க கொடியையும் அறிமுகப்படுத்தினார். கறுப்பு, சிவப்பு வண்ணத்தில் அமைந்த கொடியில், அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., படங்கள் இடம் பெற்றுள்ளன.

துவக்க விழாவில் எம்ஜிஆர் அண்ணன் சந்திரன் பேசும்போது,

மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து நாம் போராடினால் கட்சி தானாக வளரும். ஜெ. மரணத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வர போராட்டம் நடத்த வேண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். 

முன்னாள் முதல்வர் ஜெ., வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்க வலியுறுத்துவோம். மாவட்டம் தோறும் ஜெயலலிதா சிலை அமைக்க வேண்டும்.  தமிழக முழுவதும் உள்ள அ.தி.மு.க., தொண்டர்களை ஒருங்கிணைத்து, உள்ளாட்சி தேர்தலில், ஒரே சின்னத்தில் போட்டியிட முயற்சிப்போம். மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து, அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பதோடு, இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி அறிமுக விழாவில் முன்னாள் எம்.எல்.ஏவும் அவைத்தலைவருமான ஜெயபால் பன்னீர்செல்வம், தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் மோகன்தாஸ், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதர்சன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...