News
Loading...

மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

காபாரதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசினாரா? என்பது குறித்து விசாரிக்க வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், 'தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...