News
Loading...

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஜூலை 15-ம் தேதி தீர்ப்பு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஜூலை 15-ம் தேதி தீர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஜூலை 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய விரும்பினால் ஜூலை 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளைத் தொடுத்தது. இதுபோல அமலாக்கத் துறை ஒரு வழக்கு தொடுத்தது. இந்த மூன்று வழக்குகளையும் நீதிபதி ஓ.பி.சைனி விசாரணை நடத்தி வருகிறார்.

முதல் வழக்கில் ராசா, கனிமொழி தவிர, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்ட 14 பேர் மற்றும் 3 தொலைத்தொடர்பு நிறுவனங் கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இவர்கள் மீது, ஐபிசி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் 2011-ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

2-வது வழக்கில் எஸ்ஸார் குழும நிறுவனர்கள் ரவி ரூயா மற்றும் அன்ஷுமன் ரூயா, லூப் டெலிகாம் நிறுவனர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர், எஸ்ஸார் குழும இயக்குநர் விகாஷ் சரப் மற்றும் 3 நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த் தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2014-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, எஸ்டிபிஎல் புரமோட்டர்ஸ் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...