News
Loading...

சமூக வலைதளங்களில் இந்தியர்களின் கோபத்துக்கு உள்ளான ஸ்னேப் சேட் சி.இ.ஓ.

சமூக வலைதளங்களில் இந்தியர்களின் கோபத்துக்கு உள்ளான ஸ்னேப் சேட் சி.இ.ஓ.

ஸ்னேப் சேட் ((Snap chat)) நிறுவனத்தின் சிஇஓ, இந்தியாவை ஏழை நாடு என்று கருத்து கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் அந்த செயலியை மொபைலில் இருந்து நீக்கியதால் அதன் தரமதிப்பீடு சரிந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ஸ்னேப் சேட் என்ற செய்திப் பரிமாற்ற செயலியின் வணிகத்தை இந்திய சந்தையில் விரிவுபடுத்த முயற்சிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஈவன், ஸ்னேப் சேட் பணக்காரர்களுக்கானது, இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளுக்கானது இல்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை தற்போது முன்னாள் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதன் எதிரொலியாக, இந்தியர்கள் பலர், தங்கள் மொபைலில் இருந்து ஸ்னேப் சேட் செயலியை நீக்கியதால், ஆப் ஸ்டோரில் அதன் தரமதிப்பீடு நான்கு நட்சத்திரங்களில் இருந்து ஒன்றாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, தாம் அவ்வாறு கூறவில்லை என ஈவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் இந்தியா குறித்த ஈவனின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் வலுக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...