News
Loading...

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலி

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலி

ஸ்லாமிய நாடான சிரியாவில் உள்நாட்டு போருக்கு அஞ்சி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்காக பேருந்துகளில் காத்திருந்த போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உள்நாட்டுப் போர், அரசுப் படை தாக்குதல், அமெரிக்கா தாக்குதல், ரஷ்யா தாக்குதல், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் என பல்வேறு வகை தாக்குதல்களில் ஈடுபட்டு சிரியாவில் இதுவரை 3 லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

தற்போது போர் உச்சகட்டமாக நடைபெற்று வருவதால் அரசு மற்றும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வகை செய்யும் பரஸ்பர ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக அலெப்போவில் இருந்து வெளியேறிய மக்கள், அல் ரசிதீன் என்ற இடத்தில் உள்ள பேருந்து முனையத்தில் காத்திருந்தனர். 

அப்போது காரில் வந்த தீவிரவாதிகள் சிலர், பேருந்துகளின் மீது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...