News
Loading...

டி.டி.வி.தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று விசாரணை

டி.டி.வி.தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று விசாரணை

ன்னிய செலாவணி மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில், டி.டி.வி.தினகரன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள பர்க்லேஸ் வங்கியில் 1 கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களையும், லண்டன் ஹோட்டல் மூலம் 36 லட்சத்தி 36 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும், 1 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளையும் டெபாசிட் செய்ததாக டிடிவி.தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர். ஒரு கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களை டெபாசிட் செய்தது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், அந்த வழக்கை மே 10ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து, 36 லட்சத்தி 36 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும், ஒரு லட்சம் பவுண்டையும் டெபாசிட் செய்தது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில், இன்று காலை பத்தரை மணியளவில் தினகரன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...