News
Loading...

மாரியம்மன் கோவிலில் பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்!

மாரியம்மன் கோவிலில் பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்!

ராசிபுரம், தட்டான்குட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலில், தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் திருவிழா கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 10ல் சக்தி அழைத்தல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசய நிகழ்ச்சி நேற்று அதிகாலை, 4:45ல் இருந்து, 6:30 மணி வரை நடந்தது. கோவில் கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரை சொம்பில் நிரப்பிவைத்துக்கொண்டு மாரியம்மனுக்கு பூஜை செய்கின்றனர். அம்மன் முன் வைக்கப்பட்ட மண் விளக்கில் சொம்பில் இருந்த நீரை சிறிது சிறிதாக ஒரு கரண்டியில் எடுத்து விளக்கில் ஊற்றுகின்றனர். பின், அதனுள் திரியை வைத்து பற்ற வைக்கும்போது திரி கொழுந்து விட்டு எரிந்த அதிசயம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு மெய் சிலிர்த்தனர்.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...