News
Loading...

எடப்பாடி தொகுதியில் அடிப்படை வசதி கோரி போராட்டம் நடத்தியவர் கைது: அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக வழக்கு

எடப்பாடி தொகுதியில் அடிப்படை வசதி கோரி போராட்டம் நடத்தியவர் கைது: அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக வழக்கு

சேலம்: முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜீவானந்தம் என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். முதலமைச்சர் பழனிசாமி தனது தொகுதியில் அடங்கிய நங்கவள்ளி ஒன்றியத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரசுக்கு எதரிராக சதி திட்டம் தீட்டியதாகவும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்த முயன்றதாகவும் 11 பிரிவுகளில் ஜீவானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தொகுதியில் மக்கள் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...