News
Loading...

பெண் குளிப்பதை படம் பிடித்த அதிமுக தலைவர்-அவமானம் தாங்காமல் பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் குளிப்பதை படம் பிடித்த அதிமுக தலைவர்-அவமானம் தாங்காமல் பெண் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு அருகே பெண் ஒருவர் குளிப்பதை படம்பிடித்த அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் , அதனை வாட்ஸ் ஆப்பில் பரப்பியதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. புகார் அளித்து 4 மாதமாக நடவடிக்கை எடுக்காத போலீசாரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பலியான பரிதாபம்.

இவர் தான் செங்கல்பட்டை அடுத்த பொன் விளைந்த களத்தூர் ஊராட்சியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திர சேகரன்..!

கொல்லமேடு தலித் குடியிருப்பு பகுதியில் சந்திரசேகரன் புதிதாக கட்டிவரும் வீட்டின் கட்டுமானபணியை பார்பதற்காக சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள குடிசைவீட்டில் வசுமதி என்ற பெண் குளிப்பதை தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். அதனை அவர் வாட்ஸ் ஆப் மூலம் தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த வசுமதி, தனது கணவர் பன்னீர் செல்வத்துடன் சென்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளர்.

வழக்கம் போல காவல்துறையினர் புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர். தன்மீது புகார் அளித்ததால் ஆத்திரத்தில் சந்திரசேகரன் , வசுமதி குளிக்கும் வீடியோவை முக நூலிலும் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் வசுமதி குளிப்பதை மீண்டும் சந்திர சேகரன் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகின்றது.

இதனை தட்டிக் கேட்ட வசுமதியின் கணவர் பன்னீர் செல்வத்தை, சந்திரசேகர் குடும்பத்தினர் ஒன்று கூடி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பன்னீர் செல்வம், செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் குளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டதால் அவமானமடைந்த வசுமதி, வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வசுமதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வேறு வழியின்றி சந்திரசேகரனை கைது செய்தனர். போலீசார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே வசுமதியின் புகார் மீது நடவடிக்கை எடுத்து சமூக வலைதளங்களில் இருந்து அந்த வீடியோவை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது..!

போலீசார் அனைத்து புகாரையும் பாரபட்சமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்…இல்லையேல் இது போன்ற விபரீத உயிரிழப்புகளுக்கு போலீசாரே பொறுப்பேற்க வேண்டும்..! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...