News
Loading...

தீவிரவாதம் அதைத் தூண்டுபவர்களின் கழுத்தையே பாம்பாக சுற்றி நெருக்கும் -அருண் ஜேட்லி

தீவிரவாதம் அதைத் தூண்டுபவர்களின் கழுத்தையே பாம்பாக சுற்றி நெருக்கும் -அருண் ஜேட்லி

தீவிரவாதம் அதைத் தூண்டுபவர்களின் கழுத்தையே பாம்பாக சுற்றி நெருக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லீ எச்சரித்துள்ளார். 

தீவிரவாதத்தின் சவால்களை துணிவுடன் சந்திக்க வேண்டும் என்றும் அவர் மாஸ்கோவில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் தீவிரவாதத்தை ஆதரித்து தூண்டி விடுவதாக குற்றம் சாட்டிய அவர், அதற்கு எதிராக உலக நாடுகள் ஒருமித்த எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரினார். 

மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வேரூன்றியிருப்பது குறித்து கவலை தெரிவித்த அருண் ஜேட்லீ, இந்த சவாலை அனைத்து நாடுகளும் உளவுத்துறை தகவல் பரிமாற்றம், கூட்டு நடவடிக்கை போன்றவற்றால் முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...