News
Loading...

இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை

இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை

பாகிஸ்தான் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்டதால், இதழியல் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கைபர் – பக்டுங்க்வா ((Khyber-Pakhtunkhwa)) மாகாணத்தில் உள்ள அப்துல் வாலி கான் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வந்த மாணவர் மாஷல் கான், பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அவரை அடித்துக் கொலை செய்தனர். மாஷல் கான் இறந்த பிறகும், ஆத்திரம் அடங்காத மாணவர்கள், அவரை தீயிட்டுக் கொளுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாஷல் கான் உடலைக் கைப்பற்றினர். கொலை தொடர்பாக, 59 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதழியல் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, பல்கலைக்கழகத்துக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...