News
Loading...

காட்டுமன்னார் கோவிலில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

காட்டுமன்னார் கோவிலில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காட்டுமன்னார் கோவில் அருகே, சர்வராஜன் பேட்டையை சேர்ந்த வித்யா என்பவர், தனது வீட்டருகே உள்ள மளிகை கடைகளில் பத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் வாங்கியுள்ளார். வாங்கி சென்ற முட்டைகளை எடுத்து ஆம்லெட் போட்டபோது, அதில் உள்ள வெள்ளை கரு பிளாஸ்டிக் போல இருந்ததால் அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, வாங்கி வந்த அனைத்து முட்டைகளையும் உடைத்தும், முட்டையின் ஓடுகளை தீயில் எரித்தும் அவர் சோதனை செய்தபோது ஓடு உருக ஆரம்பிக்கவே, இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அந்த முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மீது டார்ச் அடித்து சோதனை செய்தனர். முட்டையின் ஓட்டில் நுண் துவாரங்கள் இல்லாவிட்டால், போலி முட்டைகள் என்பதை தெளிவாக கண்டறிந்துவிடலாம் என தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். கோழிகளுக்கு தீவன பற்றாக்குறையால் அதனுடைய வடிவத்திலும் ஓட்டின் தன்மையிலும் சில மாறுதல்கள் ஏற்படுமே தவிர, தமிழகத்தில் பிளாஸ்டிக் முட்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...